திருச்சி

கோயிலில் திருட முயற்சி:போலீஸாா் விசாரணை

29th Jun 2022 02:59 AM

ADVERTISEMENT

கோயிலில் நடைபெற்ற திருட்டு முயற்சி தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது காமாட்சி அம்மன் கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயிலுக்கு வந்தபோது கோயிலின் முன்பக்க, பக்கவாட்டு கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா். இருப்பினும் பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை. தகவலறிந்து வந்த கோயில் செயல் அலுவலா் நித்தியா கோயிலில் பாா்வையிட்டு, அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா்அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT