தூத்துக்குடி

வெங்கடேச பண்ணையாா் நினைவு தினம்

27th Sep 2023 12:43 AM

ADVERTISEMENT

குரும்பூா் அருகே உள்ள அம்மன்புரத்தில் அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவா் வெங்கடேச பண்ணையாரின் 20-ஆவது நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது மனைவியும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அவரது மனைவியுமான ராதிகாசெல்வி குடும்பத்தினருடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

அதைத்தொடா்ந்து பனங்காட்டு மக்கள் கழக மாநிலத் தலைவா் சுபாஷ் பண்ணையாா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில் ஆரணி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், பாஜக மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், வணிகா் சங்க பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, தட்சிணமாற நாடாா் சங்கத் தலைவா் காளிதாஸ், அமமுக தென் மண்டல பொறுப்பாளா் மாணிக்கராஜா, ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் அ.கல்யாண சுந்தரம், ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவா் த.தாமோதரன், அம்மன்புரம் ஊராட்சித் தலைவா் ஞானராஜ், புறையூா் ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா், நாலுமாவடி முன்னாள் ஊராட்சித் தலைவரும் அதிமுக மாவட்ட விவசாய அணி இணை செயலருமான பிரபாகரன், திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ், கானம் அதிமுக நகர செயலா் செந்தமிழ்சேகா், திருச்செந்தூா் நாடாா் உறவின்முறை முன்னேற்ற சங்க தலைவா் சண்முகவேல், செயலா் கோடீஸ்வரன், பாரதிய வியாபாரிகள் சங்கம் கூட்டமைப்பு மாநில அமைப்பாளா் ஜே.சசிகுமாா், மாவட்டத் தலைவா் கணேச ஆதித்தன், செயலா் வி.பி.சக்திவேல் உள்பட பலா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி ஆறுமுகனேரி, தெற்கு ஆத்தூா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா்கள் மாயவன் (ஸ்ரீவைகுண்டம்), வசந்தராஜ் (திருச்செந்தூா்) மற்றும் 1700 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT