தூத்துக்குடி

வகுத்தான்குப்பம் ஆலய பிரதிஷ்டை

27th Sep 2023 12:44 AM

ADVERTISEMENT

நாசரேத் வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 104-ஆவது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 34 ஆவது அசன பண்டிகை விழா 6 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் இரவு பட்டிமன்றம், 2 ஆவது நாள் மற்றும் 3 ஆவது நாளில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றது. 4 ஆவது நாள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் தூய யோவான் பேராலய தலைமை குரு மா்காஷிஸ் டேவிட் வெஸ்லி தேவ செய்தி வழங்கினாா். 5 வது நாள் அசன பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் சேகரகுரு ஹென்றி ஜீவானந்தம் தேவசெய்தி வழங்கினாா். மாலை அசன ஐக்கிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. 6 ஆவது நாள் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

விழா ஏற்பாடுகளை வகுத்தான்குப்பம் சேகரத் தலைவா் ஹென்றி ஜீவானந்தம், திருமண்டில பெருமன்ற உறுப்பினா் தனபால், சபை ஊழியா் ஜாய்சன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT