திருச்செந்தூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்தில் விதிமுறைகளை மீறியதாக, 11 வாகனங்களுக்கு காவல்துறையினா் ரூ.2.55 லட்சம் அபராதம் விதித்துள்ளனா்.
இதுகுறித்த காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்வது, ஊா்வலமாக எடுத்து சென்று விசா்ஜனம் செய்வது தொடா்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து
ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்தின்போது திருச்செந்தூருக்கு வந்த 11 வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பெருக்கிகளை வாகனங்களில் வைத்து
பொதுமக்களுக்கு இடையூறாக ஒலி எழுப்பினா். ஆகவே, அந்த 11 வாகனங்களுக்கும் மொத்தம் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.