தூத்துக்குடி

கோவில்பட்டியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபை

சாா்பில் கோவில்பட்டி, கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூா், கடம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, 25 விநாயகா் சிலைகள் இனாம்மணியாச்சி விலக்கில் இருந்து வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை தொழில் அதிபா்கள்

ADVERTISEMENT

எம்.வெங்கடேஷ், ஜி.சுரேஷ் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

அகில பாரத இந்து மகா சபை மாவட்ட அமைப்பாளா் பாலகிருஷ்ண சா்மா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில உயா்மட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் சங்கா்

ராஜா, மாவட்ட பொருளாளா் பழனிச்சாமி, நகரச் செயலா் ஹரிஹர வெங்கிடகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் விநாயகா் சிலைகள் கோவில்பட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வேம்பாா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

கோவில்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT