கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன், தலைமைக் காவலா் ஆனந்த அமல்ராஜ், காவலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் சாலைப்புதூா் அருகே திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும் வகையில் கட்டடத்தின் முன் நின்றிருந்த காா், பைக் ஆகியவற்றை சோதனையிட்டனா். அவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாய் கிருஷ்ணா அப்பாா்ட்மெண்டைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் காா் ஓட்டுநா் பிரகாஷ் (37), கோவில்பட்டி திருநகா் 2ஆவது தெருவை சோ்ந்த நெல்லையப்பன் மகன் ஆறுமுகசாமி (73) ஆகியோருக்கு இதில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், காா் ,பைக், ரொக்க பணம் ரூ.52 ஆயிரத்து 500, 85 கிலோ புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.