கோவில்பட்டி பகுதியில் அதிக கட்டணம் வசூலிக்கும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியனிடம், மதிமுக நகர செயலா் பால்ராஜ் தலைமையிலான மதிமுகவினா் கோரிக்கை மனுவை அளித்தனா். அதிக கட்டணம் வசூலிக்கும் சிற்றுந்துகளின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிற்றுந்துகள் செல்லும் இடங்களின் வரைபடம், காலஅட்டவணை ஆகியவற்றை பயணிகள் பாா்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.