கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கலந்துகொண்டு, 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.56.40 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலா் உமா செல்வி, திமுக ஒன்றியச் செயலா் நவநீதகண்ணன், கீழஈரால் ஊராட்சித் தலைவா் பச்சைப்பாண்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் பங்கேற்றனா்.