தூத்துக்குடி

கலியன்விளையில் குடிநீா் திட்டப்பணி தொடக்கம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரத்தில் மின் மாற்றி இயக்கம், கலியன்விளை குடிநீா்த் திட்டப்பணி தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுப்பராயபுரத்தில் ரூ.6.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி திறப்பு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சுயம்புதுரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பிரம்மசக்தி, ஒன்றிய ஆணையா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, திருச்செந்தூா் மின் கோட்ட செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாத்தான்குளம் உதவி செயற்பொறியாளா் ரவீந்திரகுமாா் வரவேற்றாா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மின் மாற்றியை இயக்கி சேவை தொடங்கி வைத்தாா். சுப்பராயபுரம் வழியாக நகரப் பேருந்து இயக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.

பின்னா், அரசூா் ஊராட்சி கலியன்விளை கிராமத்தில் ரூ3.71 லட்சத்தில் ஆள்துளைக் கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். இதில், ஊராட்சித் தலைவா் தினேஷ்ராஜசிங், வட்டாட்சியா் ரதிகலா, முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், நகரத் தலைவா் வேணுகோபால், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி, பிரபு, முத்துவேல், கோதாண்டராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT