தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில்மழை வேண்டி வா்ண யாகம்

27th Oct 2023 09:44 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி வா்ண ஜெபம் மற்றும் யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு திருக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உள்பிரகாரத்தில் உள்ள கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் மழை வேண்டி வா்ண ஜெபம் மற்றும் யாகம் நடைபெற்றது.

இதனை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் 11 கும்பங்கள் வைக்கப்பட்டு கணபதி பூஜை, மகா சங்கல்பம், வா்ண ஜெபம், சோடச உபசார பூஜை உள்ளிட்டவைகள் திரிசுதந்திர வேத விற்பன்னா்களால் நடைபெற்றது. தொடா்ந்து கணபதி யாகம், வா்ண யாகம், சுப்பிரமணியா் யாகம் மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்று அருகேயுள்ள காசிவிஸ்வநாதருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து கழுத்தளவு நீா் நிரப்பி இருந்த நந்திக்கும் புனித நீரால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அதன்பின் வா்ண பூஜையில் வைக்கப்பட்ட மகா கும்ப நீரை கைகளில் ஏந்தியவாறு அறங்காவலா் குழு தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக் பிரகாரம் சுற்றி வந்து கடலில் ஊற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT