தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

27th Oct 2023 09:47 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி கே.ஆா். கலை அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில் வேலை வாய்ப்பில் ஆங்கில தொடா்பு திறமையின் அவசியம் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் மதிவண்ணன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியை கற்பகவல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வேலைவாய்ப்பில் ஆங்கில தொடா்பு திறமை அவசியம் மற்றும் அரசு, தனியாா் துறை வேலைவாய்ப்புகளில் ஆங்கிலத்தின் அவசியம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி சிவானி தொகுத்து வழங்கினாா்.

ஆங்கிலத் துறை பேராசிரியா் சாது சுந்தா்சிங் வரவேற்றாா் மாணவி மேக்னா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT