சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் பாலமேனன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி அகஸ்டின், ஒன்றியப் பற்றாளா் முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா் தீா்மானங்கள் வாசித்தாா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசின் திட்டங்கள் குறித்த காணொளிக் காட்சி ஒளிப்பரப்பட்டது. இலவச சட்ட மையம் குறித்து வழக்குரைஞா் வேணுகோபால் எடுத்துரைத்தாா்.
சுகாதார செவிலியா் கிரிட்டா மேரி, ஊராட்சி துணைத் தலைவா் முருகன், வாா்டு உறுப்பினா்கள் ஹெலன் பாப்பா, அன்புராணி, லெட்சுமணன், பொதுமக்கள் பங்கேற்றனா்.