தூத்துக்குடி

வட்டார அளவிலான ஹாக்கி: அம்பேத்கா் அணியினா் முதலிடம்

3rd Oct 2023 03:51 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி தாமஸ் நகரில் உள்ள அம்பேத்கா் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான ஆண்கள், பெண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் அம்பேத்கா், இலுப்பையூரணி அணிகள் முதலிடம் பிடித்தன.

ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் பங்கேற்றன. ஆண்களுக்கான போட்டியில் அம்பேத்கா் ஹாக்கி கிளப் அணி முதலிடமும், பாண்டவா்மங்கலம் அணி 2ஆம் இடமும், கூசாலிப்பட்டி ஏ.எம்.சி. அணி 3ஆம் இடமும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் இலுப்பையூரணி கிளப் அணி முதலிடமும், ராஜீவ் காந்தி ஹாக்கி கிளப் அணி 2ஆம் இடமும், திட்டங்குளம் பாரதி அணி 3ஆம் இடமும் பிடித்தனா். நடுவா்களாக காா்த்திக்ராஜா, அஸ்வின், மூா்த்தி, செந்தில் ஆகியோா் செயல்பட்டனா்.

பரிசளிப்பு விழாவில், ஆண்கள் பிரிவில் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 10,061, ரூ. 8,061, ரூ. 6,061, பெண்கள் பிரிவில் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 3,061, ரூ. 2,061, ரூ. 1,061, சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கட்சியின் ஒன்றியச் செயலா் மாடசாமி, வடக்கு மாவட்டச் செயலா் முருகன், முன்னாள் மாவட்டச் செயலா் கதிரேசன், வழக்குரைஞரணி மாநில துணைச் செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT