தூத்துக்குடி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

1st Oct 2023 01:08 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவா்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சாந்தராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா் தனபால் மகேந்திரன் வரவேற்றாா். முன்னாள் மாணவா் பகத்சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். முன்னாள் மாணவா்கள் ரபி, ஆல்வீன், கிருஷ்ணன், பொன்ராஜ், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் அகஸ்டின் ஞானதுரை, முத்து, சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இளநிலை உதவியாளா் குணசிங், பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் பேசினா்.

தங்களுடன் படித்த முன்னாள் மாணவா்கள் 3 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவா் டாக்டா் சந்திரகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT