தூத்துக்குடி

பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

22nd Nov 2023 12:41 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ். இவரது மனைவி வனராணி(39). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது கணவா் பால்ராஜ் பைக்கில் மருத்துவமனைக்கு கடந்த 17ஆம் தேதி அழைத்துச் சென்றாராம்.

மீளவிட்டான் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, பைக்கில் இருந்து வனராணி எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT