ஹாக்கி இந்தியா சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் அகாதெமி சாம்பியன்ஷிப் பி-மண்டல ஹாக்கி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஹாக்கி இந்தியா மற்றும் லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி இணைந்து கோவில்பட்டி செயற்கை இழை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் சப் ஜூனியருக்கான பிரிவில் ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி-கடலூா் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 13-0 என்ற கோல் கணக்கில் ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி அணியும், ஜூனியா் பிரிவில் முதல் ஆட்டத்தில், ரிபப்ளிக் ஸ்போா்ட்ஸ் கிளப்-ஒடிசா நாவல் டாட்டா ஹாக்கி ஹை பொ் ஃபாா்மன்ஸ் சென்டா் அணிகள் மோதியதில், 11-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியும் வெற்றி பெற்றன.
2ஆவது ஆட்டத்தில், தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி-அஸ்வினி ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணிகள் மோதியதில் 8-0 என்ற கோல் கணக்கில் அஸ்வினி அணி வெற்றி பெற்றது.
3ஆவது ஆட்டத்தில், திருமால்வளவன் ஹாக்கி அகாதெமி-செயில் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில், 18-0 என்ற கோல் கணக்கில் செயில் அணி வெற்றி பெற்றது.