தூத்துக்குடி

சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

21st Nov 2023 01:14 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: ‘ஹாக்கி இந்தியா’ சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் அகாதெமி சாம்பியன்ஷிப் பி-மண்டல ஹாக்கி போட்டிகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திங்கல்கிழமை தொடங்கியது.

ஹாக்கி இந்தியா மற்றும் லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி இணைந்து, கோவில்பட்டி செயற்கை இழை மைதானத்தில் இப் போட்டிகளை நடத்துகின்றன. லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

சப்-ஜூனியருக்கான முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி - திருமாவளவன் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி வெற்றி பெற்றது. லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி- செயில் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதிய ஆட்டத்தில், 19 - 0 என்ற கோல் கணக்கில் செயில் ஹாக்கி அகாதெமி வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

ஜூனியா் பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி - ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதிய ஆட்டத்தில், 9 - 1 என்ற கோல் கணக்கில் ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி அணி வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் அமராவதி பேரா் ஹாக்கி அகாதெமி, எஸ்டிடி ஹாக்கி நீலகிரி அகாதெமி அணிகள் தலா ஒரு கோல் அடித்து சமநிலை பெற்றன.

ஹூப்ளி ஹாக்கி அகாதெமி- ஒடிசா நாவல் டாட்டா ஹாக்கி ஹை பொ்ஃபாா்மன்ஸ் சென்டா் அணிகள் மோதிய ஆட்டத்தில் 9-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது. ரிபப்ளிக் ஸ்போா்ட்ஸ் கிளப் மற்றும் அஸ்வின் ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணிகள் மோதிய ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் போட்டு சமநிலை அடைந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT