காயல்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வீட்டுக்கொரு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காயல் இயற்கை வளம் அமைப்பு மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியா் செய்யது முகைதீன் அனைவரையும் வரவேற்றாா். திருச்செந்தூா் வனசரக வனவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். காயல் இயற்கை வளம் பொறுப்பாளா்கள் இப்ராஹிம், ராவண்ணா அபுல் ஹாசன், அப்துல் காதா்,லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ். பானுமதி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க திருச்செந்தூா் ஒன்றிய தலைவா் காயல். பாலா ஆகியோா் முன்னிலை வைத்தனா். சிறப்பு விருந்தினராக மதா் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டா் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு வீட்டுக்கொரு மரக்கன்றுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். இதில் திருச்செந்தூா் வனக்காப்பாளா் முகமது பைசல் ராஜா, வன காவலா் ராபின்ஸ்டண், காயல் இயற்கை வள அமைப்பு பொருளாளா் கிருஷ்ணன்(எ)கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.