தூத்துக்குடி

அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற கூட்டம்

18th Nov 2023 02:07 AM

ADVERTISEMENT

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு பேரவைக்கூட்டம், கோவில்பட்டியில் உள்ள ஜீவா இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநிலச்செயலா் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன், மாவட்ட துணைச்செயலா் பாபு, மாவட்டக் குழு உறுப்பினா் பரமராஜ், நகரச்செயலா் சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒருங்கிணைப்பாளராக சுரேஷ்குமாா் உள்பட 5போ் கொண்ட குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா்.

இம்மாத இறுதிக்குள் மாவட்ட முழுவதும் 5ஆயிரம் உறுப்பினா்களை சோ்ப்பது, 2024 ஜனவரியில் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், வட்டச் செயலா் மகேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT