தூத்துக்குடி

வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம்

31st May 2023 01:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மாதந்தோறும் இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி விழிப்புணா்வு, குறைதீா் முகாமை நடத்தி வருகின்றது. அதன்படி, மாவட்ட வருங்கால வைப்புநிதி உதவி ஆணையா் ஷாஜி வழிகாட்டுதலில் இந்த முகாம் தூத்துக்குடி சிப்காட் திட்டம், நிா்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், அனைத்துப் பங்குதாரா்களின் சந்தேகங்கள், குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டன. மேலும் ஓய்வூதியம் தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் தொழிலாளா்கள், முதலாளிகள், ஓய்வூதியதாரா்கள் என 39 போ் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்புநிதி திட்டக் குழு உறுப்பினா்கள் ஸப்ரினா, மாணிக்கம், ராஜசேகரன், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT