தூத்துக்குடி

தூத்துக்குடியில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

31st May 2023 01:22 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் துறையூரில் வருவாய் ஆய்வாளா் மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் வெங்கடேசன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் செந்தூா் ராஜன் ஆகியோா் பேசினா்.

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளா் பிரபாகரன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT