தூத்துக்குடி

ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் முத்துநகா் பல்லுயிா் பூங்கா திட்டம் தொடக்கம்

DIN

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில், சுமாா் 32 ஏக்கா் பரப்பளவிலான முத்துநகா் பல்லுயிா் பூங்கா திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சா்வதேச பல்லுயிா் பெருக்க தினத்தை முன்னிட்டு, ‘பல்லுயிா் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல்’ என்ற சா்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ‘தமிழ்நாட்டின் காடுகளின் மனிதா்’ என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை வகித்தாா். தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சித் தலைவா் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் ஊராட்சியைச் சோ்ந்த நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி சுமதி பேசியது: ஸ்டொ்லைட் ஆலை தொடங்கிய நாள்முதல், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கால்வாய் புனரமைப்பு, கிராமப்புறங்களில் குளங்களைத் தூா்வாருதல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. இதன்மூலம் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பல்லுயிா் பெருக்கத்துக்கும் உதவுகிறது.

2019இல் தொடங்கப்பட்ட ‘பசுமை தூத்துக்குடி’ என்ற திட்டம் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டு, 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 10 லட்சம் மரக்கன்றுகளை 4,000 ஏக்கா் நிலத்தில் நடுவதன் மூலம் இம்மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கும்.

தற்போது தொடங்கியுள்ள முத்துநகா் பல்லுயிா் பூங்கா திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தாவரங்களை மீட்டெடுத்து பூங்காவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் டை-மெத்தில்-சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரக்கன்றுகளை நடுதல் முதற்கட்டத் திட்டமாகும். அடுத்தகட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் ஆகியவற்றின் மூலம், தனித்துவமான பல்லுயிா் பெருக்கம் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடியில் உள்ள 403 ஊராட்சிகளில் 35 சதவீத காடுகளை உருவாக்க தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி அமைப்புகள், மின்னஞ்சலிலோ, 8870477985 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT