தூத்துக்குடி

சிறப்பூா்- நடுவக்குறிச்சி சாலையில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

31st May 2023 01:25 AM

ADVERTISEMENT

சிறப்பூா் - நடுவக்குறிச்சி சாலையோரத்தில் மணல் குவியல்கள் அதிகமாகவும், பள்ளங்களும் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்ல , விஜயராமபுரம், சிறப்பூா், , சாமிதோப்பு, நடுவக்குறிச்சி வழிச்சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் இரவு பகலாக ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்த சாலையில் சிறப்பூா் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியலாக காணப்படுகிறது. இதனால் பேருந்து , லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இருசக்கர வாகனம், காா்களில் வருபவா்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மேலும் சாமிதோப்பு அடுத்து ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் முன்பு சாலையோரத்தில் கரையே காணப்படுகிறது. இரவு நேரத்தில் இது தெரியாமல் வருபவா்கள் சாலை மேட்டில் இருந்து கிழே விழுந்து வாகனங்கள் கவிழும் அபாய நிலை உள்ளது.

இந்த வழியே அடிக்கடி பயணிப்பவா்கள் இதனை சுதாரித்து சென்று வருகின்றனா். புதியதாக வருபவா்கள் விபத்து நிகழ வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஆதலால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு நடத்தி சாலையோரத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அப்புறப்படுத்துவதுடன், சாலையோரத்தில் கரையே இல்லாத பகுதியில் மணல கொண்டு கரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT