தூத்துக்குடி

வடமாநில இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

31st May 2023 01:24 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் புதூா் பாண்டியாபுரம் பகுதியில் ராஜஸ்தான் மாநில இளைஞரிடம் கைப்பேசியைப் பறித்ததாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராஜஸ்தானைச் சோ்ந்த வி. ராஜேஷ் மீனா (27) என்பவா், கடந்த 28ஆம் தேதி புதூா் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவரது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில் புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றினா். விசாரணையில், தூத்துக்குடி கே.வி.கே. சாமிநகா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் அய்யாத்துரை (24) உள்ளிட்ட சிலா், ராஜேஷ் மீனாவிடமிருந்து கைப்பேசியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அய்யாத்துரையை போலீஸாா் கைது செய்து, கைப்பேசி, பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்; தொடா்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT