தூத்துக்குடி

காவலா் தோ்வுக்கான இலவச பயிற்சி

31st May 2023 01:23 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் திருமா பயிலகத்தில் காவலா், உதவி ஆய்வாளா் போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள காவலா், உதவி ஆய்வாளா் போட்டித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; திருமா பயிலகத்தின் சாா்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் வரை இப்பயிற்சி வகுப்புகள் தொடா்ச்சியாக நடைபெறும். இதில் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் மாதிரித் தோ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து தோ்வுத்தாள்கள் திருத்தப்பட்டு, முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை திருமா பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் விடுதலைச்செழியன், சுரேந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT