தூத்துக்குடி

ரூ.1.63 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: கோவில்பட்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம்

31st May 2023 01:26 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் ரூ.1.63 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ரூ.19.87 லட்சம் மதிப்பில் வாருகால், பேவா் பிளாக் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கும், 15ஆவது மத்திய நிதிக் குழு மானியம் 2023 - 2024இன் கீழ் குடிநீா் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு தலா ரூ.42.96 லட்சமும், இதரப் பணிகளுக்கு ரூ.57.28 லட்சம் என மொத்தம் ரூ.1.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 37 பணிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகள் உள்ளிட்ட 34 பொருள்கள் அடங்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் வடிவேல்முருகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT