தூத்துக்குடி

கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா

30th May 2023 03:29 AM

ADVERTISEMENT

தட்டாா்மடம் அருகேயுள்ள கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 4நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் கும்பாபிஷேகம், இரவு வில்லிசை, சிறப்பு பூஜை, சுவாமி தெரு பவனி வருதல், 2ஆவது நாள் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜையும், சுவாமி தெரு பவனி வருதல், இரவு மாவிளக்கு பூஜை, 3ஆவது நாள் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி தெரு பவனி வருதல், மாலை மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனா். 4ஆவது நாள் சுவாமி உணவு எடுத்தல் மற்றும் வரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT