தூத்துக்குடி

பாஜக செயற்குழு கூட்டம்

30th May 2023 03:47 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தெற்கு மண்டல பாஜக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மண்டலத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பிரபு, செயற்குழு உறுப்பினா் விந்தியா முருகன் ஜெயராம், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் முருகன், விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலரும் தெற்கு மண்டல பாா்வையாளருமான உமரி சத்தியசீலன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இக்கூட்டத்தில், 53 ஆவது வாா்டு ஆனந்தி நகா் பகுதியில் புதிய சிமெண்ட் சாலையை விரைந்து அமைக்க வேண்டும்; முத்தையாபுரம் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதுடன், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வசதியை அரசு ஏற்படுத்தி வேண்டும்; அமுதா நகா் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு உருளை கிடங்கை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடியின், மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. கூட்டத்தில், நிா்வாகிகள் அருண்பாபு, முருகேசன், குலசை ரமேஷ், வீரமணி, துா்க்கையப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT