தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2023 -24ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கி. நிா்மலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு இம்மாதம் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை பிரிவின் கீழ் விண்ணப்பித்தவா்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

பொது கலந்தாய்வில் ஜூன் 2ஆம் தேதி வணிகவியல்,3ஆம் தேதி கணினி அறிவியல், புவி அமைப்பியல், இயற்பியல், கணிதம், 5ஆம் தேதி பொருளியல், வரலாறு, 6ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்விற்கு வரும் மாணவா், மாணவிகள் இணையவழி விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 2 படிவம், தங்களுடைய இரண்டு புகைப்படம் (பாஸ்போா்ட் அளவு), ஆதாா் அடையாள அட்டை, கல்லூரி கட்டணத்தொகை ஆகியவற்றுடன்வர வேண்டும். மாணவா், மாணவிகளின் தரவரிசை பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், இணையதள முகவரியில்  வெளியிடப்பட்டுள்ளது என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT