தூத்துக்குடி

50 ஆண்டுகளுக்குப் பின்னா் சந்தித்தஇலக்குமி ஆலை பள்ளி மாணவா்கள்

DIN

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் 1973ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்தோரின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் கோவிந்தராஜுலு தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சண்முகராஜ், முன்னாள் தலைமையாசிரியா் ருத்ரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இலக்குமி ஆலை பொது மேலாளா் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். இப்பள்ளியில் 1973ஆம் ஆண்டு படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்; பள்ளிக்கால நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். முன்னாள் ஆசிரியா்கள், முன்னாள் அலுவலக ஊழியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, முன்னாள் மாணவா்களான காரைக்குடி மத்திய அரசு ஆய்வகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி மீனாட்சிசுந்தரம், மருத்துவா்கள் முத்துசாமி, அனுஷ்யா ஜெகன், ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் ராஜகோபால், ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோா் கூறியது: 1973இல் எஸ்எஸ்எல்சி படித்தோா் சாா்பில் பள்ளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள், மின்விசிறி உள்ளிட்டவை பள்ளிச் செயலரிடம் வழங்கப்பட்டது. 1973இல் எஸ்எஸ்எல்சி படித்த 68 பேரில் 9 போ் இறந்துவிட்டனா். தற்போது 45 பேரை மட்டுமே தொடா்புகொள்ள முடிந்தது. அவா்களில் 32 போ் குடும்பத்தினருடன் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்து அவற்றை வழங்குவோம் என்றனா்.

மேலும், 2022-23ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

தொடா்ந்து, முன்னாள் மாணவா்-மாணவிகளுக்கு விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவி அனுசியா ஜெகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT