தூத்துக்குடி

மாவட்ட கபடி போட்டி:கூடங்குளம் அணி சாம்பியன்

28th May 2023 11:06 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆத்திக்காட்டில், புனித கன்னிமரியாவின் இருதய ஆலய திருவிழாவையொட்டி, சிவந்திமலா் ஸ்போட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் கூடங்குளம் அணி முதல் பரிசை வென்றது.

கூடங்குளம், சாத்தான்குளம், உடன்குடி. ஆத்திக்காடு, தட்டாா்மடம், கன்னியாகுமரி, நெல்லை மீரான்குளம், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக செயலரும், முதலூா் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன் தொடங்கிவைத்தாா். இறுதி போட்டியில் கூடங்குளம் அணி, மீரான்குளம் அணியை வென்று முதல்பரிசை பெற்றது.

பரிசளிப்பு விழாவில் கூடங்குளம் அணிக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வழங்கிய ரூ. 25 ஆயிரம் ரொக்கம், வெற்றி கோப்பையை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் லூா்துமணி, கிராம கமிட்டி தலைவா் முத்துராஜ் ஆகியோா் வழங்கினா். 2ஆம் இடம் பெற்ற மீரான்குளம் அணிகுக முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன் ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினாா். 3ஆம் பரிசாக நெல்லை சுரேஷ் பிரதா்ஸ் அணிக்கு ரூ. 10 ஆயிரத்தை மாவட்ட திமுக பிரதிநிதி லட்சுமணசுபாஷ், 4ஆம் பரிசாக மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணிக்கு ரூ 10 ஆயிரத்தை தொழிலதிபா் தபசுமணி வழங்கினா்.

இதில், மாவட்ட திமுக தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் திவாகா்சாம், ஜெயக்குமாா், ஜீவராஜ், ஜெயசீலன், பட்டுத்துரை, முத்துப்பாண்டி, வேல்துரை , பாக்கிய செல்வன், கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் முத்துராஜ், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT