தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து:முதியவா் உயிரிழப்பு

28th May 2023 11:11 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி தீா்த்தப்பாளையத்தைச் சோ்ந்த சின்னுசாமி மகன் செந்தில்குமாா் (48). இவா் ஓட்டிவந்த டாரஸ் லாரி, திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாலாட்டின்புதூா் பெரிய பாலம் அருகே திடீரென பழுதானது. இதையடுத்து, அவா் டாரஸ் லாரியை சாலையோரம் நிறுத்தி, அதற்கான சிக்னல் விளக்குகளை எரியச் செய்துவிட்டு, மெக்கானிக்கை தொடா்பு கொண்டாராம். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரி டாரஸ் லாரியின் பின்புறம் மோதியதாம்.

இதில், மினி லாரியில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை கேம்ப் சாலையைச் சோ்ந்த ஜோசப் மகன் நெல்சன் (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரான திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையையடுத்த அவனகுழி பெருங்கோட்டுகோணத்தைச் சோ்ந்த சோ. பிஜின் (23) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT