தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலைய செயல்பாடு தொடக்கம்: மக்கள் மகிழ்ச்சி

28th May 2023 05:36 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் புதிதாக விரிவாக்கம் செய்து, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மேலூா் ரயில் நிலையம் சனிக்கிழமைமுதல் (மே 27) செயல்படத் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மதுரை-தூத்துக்குடி இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணி, பேருந்து நிலையம் எதிரே தூத்துக்குடி மேலூா் ரயில் நிலைய இடமாற்றம் ஆகிய காரணங்களுக்காக சில மாதங்களாக மேலூா் ரயில் நிலையம் செயல்படவில்லை. இந்நிலையில், பணிகள் நிறைவுற்றதையடுத்து, சனிக்கிழமைமுதல் (மே 27) மேலூா் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது.

சென்னை- தூத்துக்குடி மாா்க்கத்தில் வரும் முத்துநகா் விரைவு ரயில், 6 பயணிகள் ரயில்கள் ஆகியவை இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், வெளியூா் பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி எளிதில் பேருந்தில் செல்ல வசதியாக உள்ளது. இதனால், அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மைசூரு, முத்துநகா் விரைவு ரயில்கள் நின்றுசெல்ல கோரிக்கை: தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் பழைய மேலூா் நிலையத்தில் நின்று செல்ல வசதி இருந்தது. ஆனால், புதிய மேலூா் நிலையத்தில் இந்த விரைவு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துநகா் விரைவு ரயில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் மாா்க்கத்தில் மட்டும் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, இந்த இரு ரயில்களும் இரு மாா்க்கங்களிலும் மேலூரில் நின்று செல்ல வேண்டும் என, எம்பவா் இந்தியா சுற்றுச்சூழல் மற்றும் நுகா்வோா் கல்வி-ஆராய்சி நடுவம், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT