தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

28th May 2023 01:41 AM

ADVERTISEMENT

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கோவில்பட்டியில் இம்மாதம் 29ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடா்பான அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா்.

கூட்டத்தில், நகரச் செயலா் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் சத்யா, பேச்சியம்மாள், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் செல்வகுமாா், பொருளாளா் அம்பிகா கே. வேலுமணி, வழக்குரைஞரணி மாவட்டச் செயலா் சிவபெருமாள், நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, வள்ளியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் இம்மாதம் 29ஆம் தேதி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சோதனையிட உரிமை உள்ளது. அவா்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த மரபெல்லாம் பின்பற்றும் வழக்கம் திமுகவுக்கு கிடையாது. அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனா்.

ஒன்றுபட்ட அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தோ்தலில் போட்டியிடும் போது வேட்பு மனுக்களில் குறிப்பிடப்படும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யும் பணி தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. எதிா்க்கட்சி தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது. இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்பது அநாகரீகமான அரசியல். இதில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது கருத்து என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT