தூத்துக்குடி

கடாட்சபுரத்தில் விவசாயிகள் போராட்டம்

28th May 2023 01:40 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் ஊராட்சிக்குள்பட்ட கடாட்சபுரத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டதில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக, விவசாய தோட்டத்தில் மின் சாதனங்கள் பழுது ஏற்படுவதாகக் கூறி விவசாயிகள் கண்ணீல் கருப்புத் துணி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாயத்துக்கு போதிய தண்ணீா் பாய்ச்ச முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மின் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி, கடாட்சபுரம் விவசாயி ஞானமுத்து தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

இதனையடுத்தும் சீரமைக்கப்படவில்லையெனில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT