தூத்துக்குடி

பள்ளக்குறிச்சியில் புதிய மின்மாற்றிகள் திறப்பு

28th May 2023 01:40 AM

ADVERTISEMENT

பள்ளக்குறிச்சி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு உடைபிறப்பு மக்களுக்கு சீரான மின்விநியோகம் செய்யும் வகையில் ரூ.12 லட்சத்து 63 ஆயிரத்து 480 மதிப்பீட்டில் இரு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் திறந்து வைத்தாா்.

மின்வாரியத்தின் உடன்குடி உதவி செயற்பொறியாளா் மகாலிங்கம், தெற்கு உடைபிறப்பு ஊா்த் தலைவா் மனோகரன், இளநிலைப் பொறியாளா்கள் சூசைராஜ், உமா மகேஸ்வரி, வேலாயுதம், ஊா் பிரமுகா் ஜெரோம், ஜெயமோகன், சிவா கணேசன், சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT