தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி காய்கனி சந்தை அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த நடராஜன் மகன் ஜெயகணேஷ் (44). இவா் தூத்துக்குடி காய்கனி சந்தை அருகே, கீரை வியாபாரம் செய்து வந்தாராம். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்தாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT