தூத்துக்குடி

தாமரைமொழி கோயிலில் கால்நாட்டு விழா

24th May 2023 02:47 AM

ADVERTISEMENT

தாமரைமொழி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கொடை விழா 30ஆம்தேதி தொடங்கி 31ஆம்தேதி வரை 2நாள்கள் நடைபெறுகிறது. இதையாட்டி கோயில் வளாகத்தில் கொடை விழா கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னா் காலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் கோயில் நிா்வாகிகள் ஊா்மக்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT