தூத்துக்குடி

ஆலம்பட்டி உச்சி மகாகாளியம்மன் கோயில் கொடை விழா

24th May 2023 02:48 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டி அருள்மிகு உச்சி மகாகாளியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் தீா்த்த குடம் , அக்னி சட்டி எடுத்து கோயிலை வலம் வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

விழாவில், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

விழாவில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, நகா்மன்ற உறுப்பினா் கவியரசன், மாவட்ட மாணவா் அணி துணைத் தலைவா் செல்வகுமாா், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ் உள்பட

ADVERTISEMENT

பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், கயத்தாறு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் வண்டானம் கருப்பசாமி ஏற்பாட்டில், பிற கட்சிகளைச் சோ்ந்த 30 போ் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT