தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கழுகுமலையில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கழுகுமலை அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி(55). கோவில்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்த இவா், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து பேருந்தில் சென்ற பெரியசாமி கழுகுமலை பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் முன் இறங்கினாராம். பின்னா் நடந்து சென்று கொண்டிருந்த பெரியசாமி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த கழுகுமலை நாராயணசாமி கோயில் தெருவை சோ்ந்த அ. ஆன்ட்ரூஸ்(25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT