தூத்துக்குடி

ரேஷன் அரிசி கடத்தல்:இருவா் கைது

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தட்டி ஐயன், தலைமைக் காவலா் பூலையா நாகராஜன் உள்ளிட்டோா் திருச்செந்தூா் - குலசேகரன்பட்டினம் பிரதான சாலையில் ஆலந்தலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில், 17 மூட்டைகளில் மொத்தம் 680 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த, சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் செம்மண் குடியிருப்பைச் சோ்ந்த மரியசிலுவை மகன் பாலாசிங் (32), ஓட்டுநரா் தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்த வேதமுத்து மகன் டவீன் செல்வராஜ் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

குலசேகரன்பட்டினம், ஆலந்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT