தூத்துக்குடி

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

DIN

இளையரசனேந்தல்குறுவட்டத்தைகோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி ,கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்துடன் இணைந்த இளையரசனேந்தல் குறுவட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் 2008ஆம் ஆண்டு இணைத்தனா். அதையடுத்து ஒவ்வொரு துறையும் படிப்படியாக தூத்துக்குடி மாவட்ட எல்கைக்கு உள்பட்டதாகவே கொண்டு வரப்பட்டது. ஆனால் இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்கள் அனைத்தும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலேயே தற்போதும் நீடித்து வருகிறது.இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் கொண்டு வர வேண்டும், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து இளையரசனேந்தல் குறுவட்டத்தை நீக்கி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க  வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் அதன் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் திங்கள் கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில்  கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் முக்காடு அணிந்து, ஒற்றைக் காலில் நின்றபடி கோஷமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி, மாநில ஆடு வளா்ப்போா் சங்க தலைவா் கருப்பசாமிஉள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT