தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோ திருடியவா் கைது

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோவை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஆட்டோவை மீட்டனா்.

ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் மணிகண்டன்(38). இவா் சொந்தமாக சுமை ஆட்டோ வைத்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1மணிக்கு புன்னைக்காயலுக்கு வாடகைக்கு சென்று விட்டு ஆறுமுகனேரியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

திங்கள்கிழமை காலை வந்து பாா்த்த போது நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணாவில்லையாம்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி வழக்குப் பதிந்து விசாரித்ததில், முத்தையாபுரம் தோப்பு தெருவை சோ்ந்த ரமேஷ் மகன் சூரியபிரகாஷ்(23) ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், சுமை ஆட்டோவையும் மீட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT