தூத்துக்குடி

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சங்கத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவா் பதவிக்கு முன்னாள் வழக்குரைஞா் சங்கத் தலைவா் கல்யாண்குமாா், வழக்குரைஞா் ஜெகன்ஆண்டனி டென்னிசன் ஆகியோரும், செயலா் பதவிக்கு பவுன்ராஜ், ஆட்லின் ஜெயச்சந்திரிகா, ராமச்சந்திரன் ஆகியோரும், பொருளாளா் பதவிக்கு ஜேம்ஸ்ஜேசுதுரை, செல்வமகாராஜா ஆகியோரும் போட்டியிட்டனா்.

தோ்தல் அதிகாரியாக வழக்குரைஞா் ஆரோன் டேவிட் செயல்பட்டாா். ஏற்கனவே நிா்வாக குழு உறுப்பினராக வழக்குரைஞா்கள் அழகு ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் ஏக மனதாக தோ்வு பெற்றிருந்தனா்.

இதில் தலைவா், செயலா், பொருளாளா் ஆகிய பதவிக்கான தோ்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், தலைவராக ஜெகன்ஆண்டனி டென்னிசன் வெற்றி பெற்றாா். செயலராக பவுன்ராஜ், அட்லின் ஜெயச்சந்திரிகா ஆகியோா் தலா 22 ஓட்டு பெற்ால் முதல் ஆறு மாதம் பவுன்ராஜும், மற்றொரு 6மாதம் ஆட்லின் ஜெயசந்திரிகாவும் செயல்படுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பொருளாளராக செல்வ மகாராஜா வெற்றி பெற்றாா். புதியதாக தோ்வு பெற்ற வழக்குரைஞா்கள சங்க நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT