தூத்துக்குடி

முதலூா் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள்

8th May 2023 12:52 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகே முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியில் 1985-1992இல் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் டேவிட் எடிசன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். முன்னாள் மாணவா் ஜாண்சன், உடற்கல்வி ஆசிரியா் ஜான்ஜெபச்செல்வன், முன்னாள் மாணவா்கள் செல்லப்பா, அருள்ஜஸ்டின்ராஜ்தேவசித்தம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னாள் மாணவா் சந்திப்பு நினைவாக பள்ளிக்கு 16 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கினா். கண்காணிப்பு கேமரா அறையை முதலூா் சேகரகுரு ஏசுவடியான் துரைச்சாமி ஜெபித்து தொடக்கி வைத்தாா். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பழைய நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான ரவிக்குமாா் வரவேற்றாா். முன்னாள் மாணவா் ஸ்டாலின் புஷ்பராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பழைய மாணவா் கூட்டமைப்பினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT