சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தெற்கு, வடக்கு பேய்க்குளத்தில் காய்சசல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் ஈடுபட்டனா். கொசுப் புழு ஒழிப்பு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. டெங்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசரம் வழங்கப்பட்டது.
பேய்க்குளம் பஜாரில் பழைய இரும்புக் கடை உள்ளிட்ட கடைகளில் மழைநீா் தேங்குவது கண்டறிந்து அகற்றப்பட்டது. தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.