நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்தில் 56ஆவது அசனப் பெருவிழா சமபந்தி விருந்தாக நடை பெற்றது.
பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு ஜெபித்துத் தொடக்கிவைத்தாா். சமபந்தி விருந்தில் நாசரேத், பிரகாசபுரம், மூக்குப்பீறி சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு தலைமையில் அசனக் கமிட்டி நிா்வாகிகள், அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனா்.