தூத்துக்குடி

ஏணியிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி பலி

3rd May 2023 03:26 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வேலாயுதபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் முருகவேல் (51). கோவில்பட்டி கடலைகாரத் தெருவில் உள்ள பலசரக்குக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை கடையில் ஏணி மூலம் ஏறி பலசரக்கு பொருள்களை மேலே அடுக்கிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT