தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று சிவன் கோயில் தேரோட்டம்

3rd May 2023 03:21 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மே 3) நடைபெறுகிறது.

இக்கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மாலையில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை (மே 3) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, 4 ரத வீதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT