தூத்துக்குடி

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

3rd May 2023 03:12 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, பொது நூலகத் துறை கோவில்பட்டி, பாரதி அறக்கட்டளை, கோவில்பட்டி வாசகா் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து நடத்தும் இப்புத்தகக் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் சுசிலா தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்தாா். முதல் விற்பனையை சாகித்ய அகாதெமி விருதாளா் சோ.தா்மன் தொடங்கி வைக்க, ரோட்டரி சங்கத் தலைவா் ரவிமாணிக்கம், தொழிலதிபா் ஆசியா பாா்ம்ஸ் பாபு ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

கண்காட்சியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மாதம் 12ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புத்தகக் கண்காட்சி பொறுப்பாளா் தெரிவித்தனா்.

இதில் உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் இரா.சிவானந்தம், திருவள்ளுவா் மன்றத் தலைவா் கருத்தப்பாண்டி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை சந்தனமாரியம்மாள், பாரதி அறக்கட்டளை தலைவா் முத்துமுருகன், வட்டார நூலகா் அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT